Showing posts with label பார்ப்பனத்திமிர். Show all posts
Showing posts with label பார்ப்பனத்திமிர். Show all posts

Monday, May 28, 2007

பார்ப்பன திமிரின் வண்ணம்!

நீல வண்ணம் எந்த வருணம் ?

சிறி
27.05.06







Jodhpur, the blue city

in Jodhpur, Rājasthān (India)

போருக்கு போன தன் மணவாளன் மீளத்திரும்பாதபோது அவன் வாளுக்கு மாலையிடும் வீரத் திருமகள்கள் என்று வீரம் ஊறிப்போன இராஜ புத்திரர் பரம்பரைப் புகழ் பேசும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதன் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 285 கிலோமீற்றர் தெற்காக அமைந்திருக்கும் ஜொத்பூர் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டாவது பிரதான நகரமாகும். மேலேயுள்ள படங்கள் இந்த ஜொத்பூர் நகரத்தின் மையப்பகுதி.


இந் நகரம் நீல வண்ணத்தில் குளித்தெழுந்திருப்பது தற்செயலானதல்ல. தேர்ந்தே தெரிவு செய்து நீல நிறம் பூசப்பட்ட இந்த நீல வண்ண வீடுகள் எதையோ பறைசாற்றுகின்றன. அது வேறு எதுவுமல்ல பார்ப்பனர் தம்மை மற்றையோரிடமிருந்து பிரித்தறிவிப்பதற்காக பூசிக் கொண்ட சாயம்.


நீல வண்ண வீடா கவனம் ? நீ பார்ப்பான் வீட்டில் காலடி வைக்கின்றாய் என்று கீழ்சாதிக்காரனுக்கு அறைந்து சொல்வதற்காக திமிருடன் பூசிய நீல வண்ணச் சாயம். சாதித்திமிர் தனது இல்லங்களுக்கும் சாதிச்சாயம் பூசிக் கொண்டு தன்னை திமிராய் அடையாளப்படுத்தியதன் மூலம் சாயம் பூசா இல்லவாசிகளை தனக்கு கீழானதாய் இழிவுபடுத்தும் இந்த பார்ப்பனச் சாதிச் சாயக் கொள்கையை சாய்ப்பது எப்படி?


Google Earth இல் படங்கள் தெளிவாக பெறலாம்

மேலும் பல விரிவான கட்டுரைகளுக்கு
நன்றி தமிழரங்கம் இணையத்தளம் செல்க