Thursday, December 27, 2007

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து....

- ஆசிஸ் கேத்தன்.







வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப்,பெரும்பாலும் போலீஸின் உடந்தையோடு மாநிலம் பரவலாக தாயாரித்து விநியோகமும் செய்தார்கள்.

2002-ல் பஜ்ரங்தள் ராஷ்டிரீய ஸசன்யோக்கில் இருந்தவனும், தற்போது கோத்ரா சட்டமன்ற தொகுதியின் (கலவரத்துக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டை) பாஜக MLA ஆகவும் இருக்கும் ஹரேஷ் பட் என்பவன், தனதுச் சொந்தப் பட்டாசு தொழிற்சாலையில் வைத்து குண்டுகள் தாயாரிக்கப்பட்டதாக இதுவரை எவராலும் அறியப்படாத ஒரு தகவலைக் கூறினான். ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட நாட்டு வெடிகுண்டுகள் எல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றத் தகவலையும் அவன் விளக்கினான். இவ்வாறு தாயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் அஹ்மதாபாத்திலுள்ள கொலைகார வன்முறை கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

2002-ல் அஹ்மதாபாத்தில் ஊரங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், வாள்கள் பஞ்சாப்பிலிருந்தும், நாட்டுத் துப்பாக்கிகள் உ.பி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்ட எந்த மாநிலங்களிலும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லாதிருந்தும் கூடக் கொண்டு வர முடிந்தது என பட் பெருமையாகக் கூறி கொண்டான். பிற மாநில எல்லைகளைக் கடந்துக் கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல்கள் ஒரு முறையல்ல, பலத் தடவைகள் கொண்டு வரப்பட்டன; "குவியல் குவியலாக அவைகள் இருந்தன" என்றத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான்.

குஜராத் கலவரத்துக்குச் சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட, "அவனால் பயிற்றுவிக்கப்பட்ட 40 இளைஞர்கள் டிசம்பர் 1992 பாபரி மசூதி இடித்த சம்பவத்தில் பங்கெடுத்ததாக", அதி முக்கியம் வாய்ந்த மற்றொரு இரகசியத்தையும் பட் வெளிப்படுத்தினான். இராணுவத்தில் தரப்படும் பயிற்சியை ப் போல, தடை ஓட்டப் பயிற்சி, 30 அடி கயிற்றில் எவ்வாறு ஏறுவது போன்றப் பயிற்சிகளை அவன் அந்த இளைஞர்களுக்குக் கொடுத்தானாம். அந்தப் பயிற்சி முகாம் இன்றும் அஹ்மதாபாத்தில் உள்ளது.




நன்றி பதிவர்கள்:

இறை நேசன்

தமிழரங்கம்

0 comments: